NEWS

YOUR COMMENTS

News Articles

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் கடல்வழிப் போராட்டம்

 

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் கடல்வழிப் போராட்டம்

 

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரிப் போராடிவரும் அப் பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை கடல்வழி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடிந்தகரை மக்களுடன் கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் துாத்துக்குடி மாவட்ட மீனவர்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அணு உலையை மூடவேண்டும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும், என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அணு மின்நிலையத்திற்கு 500 மீட்டர் தொலைவில் கடலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்தவாறு, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர் .
 
போலீசாரால் தேடப்பட்டுவரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மற்றும் மூத்த தலைவர்கள் முகிலன் மற்றும் புஷ்பராயன் ஆகியோரும் இன்றைய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
 
4 மணியளவில் போராட்டக்காரர்கள் திரும்பினர். தமிழக போலீஸ், மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.
 
அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. ஹெலிகாப்டரிலும் படகுகளிலும் மூலம் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
 
இதனிடையே கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவுபெற்றுவிட்டதாகவும், அடுத்த சில வாரங்களில் மின் உற்பத்தியைத் துவங்கமுடியும் என அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உச்சநீதிமன்றத்தில் கூடங்குளம் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த பொது நல வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நன்றி - BBC தமிழ்
Posted in: Home, Indian News
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.