NEWS

YOUR COMMENTS

News Articles

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரழந்த வர்களுக்காக விசேட அஞ்சலி

 

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரழந்த வர்களுக்காக விசேட அஞ்சலி

 

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக விசேட அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
 
நாடு தழுவிய ரீதியில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
 
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத் விமான நிலையத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விமான விபத்தில் 127 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கராச்சியிலிருந்து இஸ்லாமபாத் நகர் நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
விபத்துக்குள்ளான போயிங் 737 ரக பயணிகள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கறுப்புப் பெட்டி விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக விபத்து இடம்பெற்றுள்ளது.
 
சீரற்ற காலநிலையே விபத்திற்கான காரணம் என நம்பப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், அந்தளவிற்கு உருக்குலைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானம் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளது.
 
Posted in: Home, World News
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.