செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

ஏணை மீதிருந்த துணி, ஏணையில் படுத்துறங்கிய குழந்தை மீது வீழ்ந்ததால் , குழந்தை மூச்சுதிணறி உயிரிழப்பு

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

ஏணை மீதிருந்த துணி,  ஏணையில் படுத்துறங்கிய குழந்தை மீது வீழ்ந்ததால் , குழந்தை மூச்சுதிணறி உயிரிழப்புயாழ்.நவாலி தெற்கு பகுதியில் சனிக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது.  இது தொடர்பில் தெரிய வருவதாவது ,

அன்றைய தினம் தாய் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு  ஏணையில் குழந்தையை படுத்தி விட்டு சமையல் வேலைகளை செய்ய சென்றுள்ளவேளை  ஏணைமீதிருந்த தூணி ஒன்று  ஏணையில் படுத்துறங்கிய குழந்தை மீது வீழ்ந்ததில் குழந்தை மூச்சு திணறலுக்கு இலக்காகியுள்ளது.

தாயார் சமையல் வேலைகளை முடித்து விட்டு குழந்தையை தூக்க சென்ற வேளை குழந்தை அசைவற்று இருந்ததை அவதானித்து உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் , உயிரிழப்புக்கு மூச்சு திணறலே காரணம் என தெரிவித்து உள்ளனர்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.