செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் பெறுபேறுகள் எமது நாடுகளில் சமாதானம்,பாதுகாப்பு சுபீட்சத்தை மேம்படுத்தும்

 

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் பெறுபேறுகள் எமது நாடுகளில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தும் – ஜனாதிபதி

ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டின் பெறுபேறுகள் எமது நாடுகளில் சமாதானம்,பாதுகாப்பு சுபீட்சத்தை மேம்படுத்தும்


‘ஆசிய ஒத்துழைப்பு உரையாடல்’ தொடர்பான இரண்டாவது உச்சி மாநாட்டின் பெறுபேறுகள் ஆசிய ஒத்துழைப்பு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டார்.

எதிர்வரும் வருடங்களில் ஆசியா ஒரு புதிய நிதிக் கேந்திர நிலையமாகவும் நிதிச் சேவை தொழிற்துறைக்கான மையமாகவும் மாறும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆசிய ஒத்துழைப்பு உரையாடலின் பங்கை ஒரு செயல்திறமான மன்றமாக மேலும் கட்டியெழுப்பும் நோக்குடன் ‘ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் தொலைநோக்கு 2030’ மற்றும் ‘ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பிராந்திய ஒத்துழைப்புக்கான வீதி வரைபையும் ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் நாடுகளின் தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இன்று (10) பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடலின் இரண்டாவது உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன அவர்கள், ஒரு வளர்ந்துவரும் பொருளாதார நாடான இலங்கையின் நோக்கம் ஒரு உயர்ந்த வருமானம் பெறும் அபிவிருத்தி அடைந்த நாட்டின் நிலையை அடைவதாகும் எனத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பல்வேறு கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.


ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பிராந்தியத்தில் சுற்றுலா துறைக்கு ஒரு பாரிய வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இது எமது நாடுகளில் நிலையான சமூக, கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வகிக்கலாம். இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கும் ஒரு முக்கிய துறையாக சுற்றுலாத்துறை இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துறையின் அபிவிருத்தியை ஒரு முக்கிய அம்சமாக நாம் கருதுகிறோம் என்றும் ஜனாதிபதி சிறிசேன மேலும் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டில் புருனை நாட்டின் சுல்தான், குவைத் அமீர், பூட்டான் பிரதமர், கம்போடிய பிரதமர், ஈரான் ஜனாதிபதி, லாவோஸ் பிரதமர், மலேசியப் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
10.10.2016
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.