செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்"

 

“புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்"புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம் என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழில் , ஞாயிற்றுக்கிழமை மாலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கங்கை அமரன் உட்பட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன். ஐம்பது வருடமாக நான் பாடி வருகின்றேன்.

இப்போது தான் நான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வருகிறேன். அதனை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது.

நாங்கள் புண்பட்ட உங்கள் இதயங்களுக்கு , இசை மருந்தை கொடுக்க தான் வந்து இருக்கின்றோம். என தெரிவித்தார்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.