செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவதில் மாற்றமில்லை – பிரதமர்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவதில் மாற்றமில்லை – பிரதமர்


 
புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவத்தில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பௌத்த விஹாரையொன்றின் கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அவர் இதனை நேற்று குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய அரசியல் சாசனத்தில் பௌத்த மதம் தொடர்பில் காணப்படும் முக்கியத்துவம் மற்றும் அதனை பாதுகாப்பது தொடர்பான சரத்துக்கள் எவ்வித மாற்றமும் இன்றி புதிய அரசியல் சாசனத்திலும் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றில் அங்கம் வகித்து வரும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த யோசனைத் திட்டத்திற்கு இணங்கம் தெரிவித்துள்ளனர் எனவும் பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பதனை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல் கட்சிகள் மட்டுமன்றி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் இதற்கு இணங்கியுள்ளதாகவும் பௌத்த மதத்தை பாதுகாப்பது தொடர்பிலான சரத்துக்கள் அதேவிதமாக உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.