செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த
வடக்கில் இடம்பெற்ற எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற எழுக தமிழ்பேரணியின் பின்னால் அரசில்  உள்ள சிலர் உள்ளனர், பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, நாமும்  பார்த்துக்கொண்டுதானிருக்கின்றோம், சுவரை நோக்கி எம்மை தள்ளிச்செல்ல முடியும் ஆனால் சுவரில் சாய்ந்து மன்னிப்பு கேட்கும் இனம் அல்ல சிங்களவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
03-10-2016, 17:59
 - Posted by Siva.
<<< வடக்கில் இடம்பெற்ற எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர். ...சுவரில் சாய்ந்து மன்னிப்பு கேட்கும் இனம் அல்ல சிங்களவர்கள். >>> மகிந்த ராஜபக்ச.

இந்தப், 'பதவி/ பணப் பித்துப் பிடித்த', இனவாதி யாரைக் குறிப்பிடுகின்றார்? சித்தம் கலங்கிவிட்டதா அன்றிப் போதை தலைக்கேறிவிட்டதா? 'சிங்களவர்கள் மன்னிப்புக் கேட்கும் இனமல்ல', என்று கூறியதன் மூலம், அரசில் அங்கம் வகிக்கும் வேற்று இனத்தவரைக் குறிப்பிடுகின்றாரா? நயவஞ்சகப் போரில் தற்காலிகமாகத் தோற்றுப் போய்விட்டதால், 'தமிழ் இனம் மன்னிப்புக் கேட்கும் இனம்', என்ற கற்பனையில் இருக்கின்றார் போலும்? இவரின் அன்றைய வெற்றிக்கும், இன்றைய தோல்விக்கும், -விரும்பியோ விரும்பாமலோ-, சிறுபான்மையினர்தான் காரணமென்பதை எப்படி மறந்தார்?
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.