NEWS

YOUR COMMENTS

News Articles

மஹிந்த ராஜபக்ஸ பதவிக்கு ஆசைப்படக்கூடாது – துமிந்த திஸாநாயக்க

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மஹிந்த ராஜபக்ஸ பதவிக்கு ஆசைப்படக்கூடாது – துமிந்த திஸாநாயக்க




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவிக்கு ஆசைப்படக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மீளவும் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்காது, சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காகவே மஹிந்த பாடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கட்சியை மறுசீரமைத்தல் மற்றும் மீளமைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


தேவையான நேரத்தில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்களின் பேராதரவு காணப்படுவதாகவும் குருணாகலில் நடைபெற்ற மாநாட்டில் இதனை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஸவினால் மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது, பிரதமராகவும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Posted in: Home
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.