NEWS

YOUR COMMENTS

News Articles

பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின் நெறியாள் கையில் 'ஓம் சரவணபவ' பயிற்சிப்பட்டறை:

 

பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித்தின்  நெறியாள் கையில்  'ஓம் சரவணபவ' பயிற்சிப்பட்டறை:

இந்தியத் துணைத்தூதரகம்
யாழ்ப்பாணம ;
ஊடக அறிக்கை – தெய்வ சுகா சுகானுபவம  5
இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித் அவர்களின்  நெறியாள் கையில் அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டிய அளிக்கைகள் மற்றும் பயிற்சிப்பட்டறை


நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, இந்தியத் துணைத்தூதரகமானது, வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான பேராயம்ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில  இந்தியாவின் பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித் அவர்களின் நெறியாள்கையில் அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டிய அளிக்கைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளை ஓகஸ்ட் 31 மற்றும் செப்ரெம்பர் 1ம், 2ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில  நடாத்தியது.


இந்திய பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஸ்ரீமதி ராதிகா சுராஜித் அவர்களின் பரதநாட்டியம் தொடர்பான பயிற்சிப்பட்டறை புதன்கிழமை 31 ஓகஸ்ட் 2016 அன்று யாழ்.


பொது நூலக மாநாட்டு மண்டபத்தில ; பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது. இப் பயிற்சிப்பட்டறையில் 300க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து
கொண்டனர்.


ஸ்ரீமதி ராதிகா சுராஜித் அவர்களின் நெறியாள்கையில் அவரது குழுவினரின் 'ஓம் சரவணபவ' பரதநாட்டிய நிகழ்வு வியாழக்கிழமை 1, செப்ரெம்பர் 2016 சங்கிலியன் தோப்பு நல்லூரில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட கலாரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் வெள்ளிக்கிழமை 2 செப்ரெம்பர் 2016 அன்று நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில  ஸ்ரீமதி ராதிகா சுராஜித் அவர்களின் நெறியாள்கையில் 'பாட்டும பரதமும்' பரத நிகழ்வும் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில மிகவும் சிறப்பாக இக்கலைநிகழ்வு நடைபெற்றது.


நெடுந்தீவின் வரலாற்றில் இவ்வாறான மிகப்பெரிய அளவில அதிலும் குறிப்பாக இந்தியக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் கலைநிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியமை இதுவே முதன்முறையாகும்.

4 செப்ரெம்பர் 2016
யாழ்ப்பாணம

Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.