NEWS

YOUR COMMENTS

News Articles

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் ரம்ஸான் நல்லிணக்க விழா: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-

 

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் ரம்ஸான் நல்லிணக்க விழா: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-

 

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில்  ரம்ஸான் நல்லிணக்க விழா  இன்று(28) காலை 10 மணியளவில் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.


இதன் போது யாழ் கல்வி வலயத்தினை சேர்ந்த 100க்கு அதிகமான 3 பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


குறிப்பாக யாழ்  நாவாந்துறை மகாவித்தியாலயம்,வைத்திஸ்வரா கல்லூரி,கொட்டடி நவசிவாயம் பாடசாலை ஆகியவற்றுடன் யாழ் ஒஸ்மானியா கல்லூரியும் இணைந்து கலை கலாசார நிகழ்வுகளை மேடை ஏற்றின.

 

முதலில்  கிராஅத் ஓதப்பட்டு ,பாடசாலை கீதம் இசைக்கப்பட்டன.
தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது.


 அடுத்து மாணவர்களின் கோலாட்டம்,பாட்டு,நாடகம் என நிகழ்வுகள் நடைபெற்றன.


இதன் போது  பாடசாலை அதிபர் எம்.அஸ்ரப்,வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா,வட மாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா உறுப்பினர்களான ஆனல்ட்,அய்யூப் அஸ்மின்,முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான மௌலவி சுபியான்,சரபுல் அனாம்,பாடசாலை பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.