செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

உங்கள் வானொலி GTBC.FMல் தாயகத்திலிருந்து 'பத்திரிகை பார்வை' புதிய நிகழ்ச்சியில் தீபச் செல்வன்!

 

உங்கள் வானொலி GTBC.FMல் தாயகத்திலிருந்து 'பத்திரிகை பார்வை' புதிய நிகழ்ச்சியில் தீபச் செல்வன்!

 

 
ஜிரிபிசி எப்.எம் வானொலியில் பத்திரிகை பார்வை என்ற புதிய நிகழ்ச்சி நாளை தினம் 10ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளிவரை வார நாட்களில் லண்டன் நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரை இடம்பெறவுள்ளது. 
 
தாயகத்திலிருந்து வெளிவருகின்ற பிராந்திய தமிழ் பத்திரிகைகள் கொழும்பிலிருந்து வருகின்ற தேசிய தமிழ் பத்திரிகைகள் குறித்த பார்வையாக இந்த நிகழ்ச்சி அமைகின்றது. 
 
இந்த நிகழ்ச்சியை ஈழத்தின்  கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளரமான தீபச்செல்வன் தொகுத்து வழங்குகிறார். 
 
தாயக பத்திரிகைகளின் ஊடாக அவைகளின் செய்திகளின் ஊடாக தாயக நிலவரத்தை அறிந்து கொள்ள

www.gtbc.fm மில் இடம்பெறும் பத்திரிகைப் பார்வை நிகழ்ச்சியை நேயர்கள் செவிமடுக்க முடியும்.

அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
09-08-2015, 22:40
 - Posted by Siva.
<<< தாயகத்திலிருந்து வெளிவருகின்ற பிராந்திய தமிழ் பத்திரிகைகள் கொழும்பிலிருந்து வருகின்ற தேசிய தமிழ் பத்திரிகைகள் குறித்த பார்வையாக, ஜிரிபிசி எப்.எம் வானொலியில் பத்திரிகைப் பார்வை என்ற புதிய நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. >>>

இது போன்றதொரு நிகழ்ச்சி மிகுந்த வரவேற்புக்குரியது! இணையத் தளங்களில் பத்திரிகைகளைத் தேடி வாசிக்கும் பொறுமையும் வசதியும் என் போன்ற பலருக்கு
இல்லையென்றே நம்புகின்றேன்?

ஏற்கனவே சில தொலைக்காட்சி ஊடகங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றாலும், அவர்கள் பத்திரிகைச் செய்திகளுடன் தமது விமர்சனக் கருத்துக்களையும் திணிக்க முயல்வது, ஏற்புடையதல்ல! வேறு சில ஊடகங்கள், 'நுனிப் புல்', மேய்ந்த கதையாக, மிகக் குறைந்தளவு செய்திகளையே தருகின்றார்கள்!

திரு. தீபச்செல்வனின் பார்வையில் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமையச் செய்திகளைத் தொகுத்து வழங்குவாரென நம்புகின்றோம்!

வாழ்த்துக்கள்!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.