NEWS

YOUR COMMENTS

News Articles

சிரிய கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் - USA &UK

 

சிரிய கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் - USA &UK


சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அமெரிக்காவம், பிரித்தானியாவும் தெரிவித்துள்ளன.
சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காவிட்டால் எதிர்காலத்தில் ஆதரவு வழங்குவதனை நிறுத்திக்கொள்ள நேரிடும் என அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. எதிர்வரும் வாரத்தில் ஜெனீவாவில் சிரியாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் கிளர்ச்சி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிரிய கிளர்ச்சிக்குழுக்களுக்கு இடையில் மோதல்கள் வெடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது, சிரியாவின் எதிர்க்கட்சிக்குழுக்களுக்கு இடையில் அண்மைக்காலமாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.
 

Posted in: Home, World News
Comment(s)
There are currently no comments, be the first to post one.
Add Comment
Only registered users may post comments.
 
 

 

.